வற்கலாவில் ஒரு பெருநிகழ்வு

இந்த ஆண்டு வற்கலா நாராயண குருகுலத்தின் நூறாம் ஆண்டு நிறைவு. 1923 டிசம்பரில் நாராயண குருகுலம் நாராயண குருவால் குருவால் உருவாக்கப்பட்டது.

அது கொந்தளிப்பான காலகட்டம். அடுத்த ஆண்டே நாராயண குருவின் மாணவரான டி.கே.மாதவனால் வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. கேரளத்தின் பண்பாட்டுத்தலைவர்கள் ஏறத்தாழ அனைவருமே பங்குகொண்டதும், காந்தியால் முன்னெடுக்கப்பட்டதுமான அந்தப் பெருநிகழ்வு கேரள வரலாற்றில் திருப்புமுனையாக ஆனது. அதன் வெற்றியில் நாராயண குருவுக்குப் பெரும்பங்குண்டு.

1924ல் நித்ய சைதன்ய யதி பிறந்தார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குரு நித்யாவின் நூற்றாண்டு.

வற்கலாவில் நாராயண குருகுலத்தில் நாராயண குருகுலத்தின் நூறாண்டு நிறைவும் குரு நித்யா நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின் தொடக்கமும் இணைந்து ஏழு நாள் விழாவாக நிகழ்கிறது.

டிசம்பர் 23 முதல் டிசம்பர் 29 வரை ஏழுநாட்கள் இந்த விழா நிகழ்கிறது. 23 டிசம்பர் காலை 10 மணிக்கு நித்யாவின் மாணவரான கல்விச்சிந்தனையாளர் பீட்டர் மொரேஸ் கொடியேற்றி நிகழ்வைத் தொடங்கிவைக்கிறார். நாராயண குருகுலத்தின் இப்போதைய தலைவர் முனி நாராயணப் பிரசாத், அடுத்த தலைவர் சுவாமி தியாகீஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்

தொடக்கவிழாவில் முன்னாள் அரசுச் செயலர் வி.பி. ஜாய் தலைமை வகிக்கிறார். நித்யாவின் மாணவர்களான நான்ஸி யீல்டிங்எம்மா வாக்கர்  ஆகியோருடன் நானும் உரையாற்றுகிறேன்.

தொடர்ந்து ஐந்துநாட்கள் கருத்தரங்கு, கலைநிகழ்வுகள் ஆகியவை நிகழ்கின்றன

முந்தைய கட்டுரைஅரசியும் அன்னையுமான ஒருத்தி
அடுத்த கட்டுரைவெள்ளம், கடிதம்