ஆணல்ட் சதாசிவம்பிள்ளை வட்டுக்கோட்டை குருமடம் என்னும் மதப்பள்ளியின் தொடர்ச்சியாக அதனை யாழ்ப்பாணக் கல்லூரியாக நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். கல்லூரியின் இயக்குநரகத்தின் உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். மானிப்பாயிலும் சாவகச்சேரியிலும் உடுவிலிலும் ஆணல்ட் சதாசிவம் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றினர். 1881-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1892 வரை பணியாற்றினார்.
தமிழ் விக்கி ஆணல்ட் சதாசிவம் பிள்ளை