யுவன் ஆவணப்படம்

யுவன் ஆவணப்படம். கவிஞர் ஆனந்த்குமார் எடுத்தது. நல்ல ஒளிப்பதிவு, படத்தொகுப்பு. கூடவே கதாநாயகனும் சிறப்பாக இருக்கிறார். அவர் தன்னை ஒரு ஜேம்ஸ்பாண்ட் அல்லது மம்மூட்டி என (தன் மாற்று மெய்மையில்) நினைத்திருப்பது அவர் அணிந்திருக்கும் கறுப்புக் கண்ணாடியில் தெரிகிறது. தெலுங்கு கதைநாயகர்கள் போல சண்டைக்காட்சிகளிலும் கறுப்புக்கண்ணாடி அணிவாரா தெரியாது. காதல்காட்சிகளில் இருக்கும் என படுகிறது. நாலைந்து பிகினிப்பெண்டிரை அரங்கப்பொருட்களாக அமைத்து எடுத்திருக்கலாமென தோன்றாமலில்லை.

முந்தைய கட்டுரைகதைநாயகன் தப்பி ஓட்டம்!
அடுத்த கட்டுரைஆனந்த் ஸ்ரீனிவாசன்