இணையத்தில் எழுத…

அன்புள்ள ஜெயமோகனாருக்கு வணக்கம்.

இணையத்தில் தமிழில் எழுத… கட்டுரை படித்தேன். அது பற்றிய ஒரு இணைப்பை தங்கள் கவனத்திற்காக தருகிறேன்.

தமிழ் தட்டச்சு பற்றிய விக்கிபீடியா கட்டுரை இது. பல தகவல்களை தொகுத்திருக்கின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81

நான் பயன்படுத்துவது கனல்நரி உலாவியில் ( firefox browsera தாங்க சொல்றேன் :) ) தமிழ்விசை இணைப்பை. மிக நன்றாக இருக்கிறது. அது தவிர NHM Writerஐ.

அன்புடன்
கோமேதகராஜா

அன்புள்ள ஜெ.,

மேலும் சில தமிழ்த் தட்டச்சு வழிமுறைகள்:

1. Firefox மென்பொருளில் TamilKey என்ற Add-onஐப் பயன்படுத்தலாம்… மின்னஞ்சல்களை வேறொரு மென்பொருளில் தட்டச்சிப் பின் வெட்டி ஒட்டும் வேலை மிச்சம். தமிழ் வார்த்தைகளை கூகிளிடவும் இது மிகவும் சௌகரியமான ஒன்று.

2. www.google.com/transliterate/indic
   
கூகிளின் வழக்கமான புத்திசாலித்தனம் மிளிரும் URL இது. தமிழ் Dictionary மூலம் வார்த்தைகளுக்குப் பிரதி வார்த்தைகளும் கிடைக்கும்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ஜெயமோகன்,

ஸ்ரீனிவாசன் அவர்களின் “இணையத்தில் தமிழில் தட்டச்சு” செய்வதற்கான முறைகள் பற்றிய கட்டுரை பார்த்தேன். Browser மூலமாகவே எளிதாக தட்டச்சு செய்ய உதவும் இரு சுட்டிகளைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தக் கடிதம் வரைகிறேன்:

http://www.google.com/transliterate/indic/Tamil

http://quillpad.in/tamil/

இவை இரண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது எளிமையாய் உள்ளவர்களுக்கு ஆங்கில எழுத்துக்கள் கொண்டே தமிழில் “transliterate” செய்ய உதவும் பக்கங்கள். உதாரணத்துக்கு, “தமிழ்” என்று தட்டச்சு செய்ய வேண்டும் என்றால், “Tamil” என்றோ, “Thamizh” என்றோ தட்டச்சு செய்தால் போதும். நேரம் கிடைக்கும் பொழுது உபயோகித்துப் பாருங்கள்.

நன்றி,
– கார்த்திக்

முந்தைய கட்டுரைஅவுஸ்திரேலியாவில் தமிழ்
அடுத்த கட்டுரைஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்