தன் வரலாற்று நாவல்கள்

வணக்கம் . சில தன்வரலாற்றுத் தொனியில் இருக்கும் சில நாவல்கள் குறித்த பதிவு இது. தன்வரலாறு,நாவலுக்கான தன்மையுடன் ஒலிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் ஒன்று நாவலின் தன்மையோடு இருக்கிறதா?

http://vallinam.com.my/navin/?p=759

ம.நவீன்

அன்புள்ள நவீன்

ஓர் ஆசிரியர் அதைப் புனைகதை என்று சொல்லிக் கொண்டாரென்றால் அதைப் பிறகு தன்வரலாறாகக் கொள்ளக்கூடாது. தன் வரலாற்று அம்சம் பெரும்பாலும் எல்லாப் புனைகதைகளிலும் இருக்கும். சில கதைகளில் அதிகம். அவற்றைத் தன்வரலாற்று நாவல் என்கிறோம்.

உதாரணமாகக் ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ [சுந்தர ராமசாமி] தன் வரலாற்று அம்சம் உள்ள நாவல். ஆனால் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ [ராஜ் கௌதமன்] தன்வரலாற்று நாவல்.

சில தன்வரலாற்று நாவல்களைப் பட்டியலிடுகிறேன்.

1. சுதந்திரதாகம் – சி.சு.செல்லப்பா

2. காதுகள் -எம்.வி.வெங்கட்ராம்

3. தேரோடும் வீதி- நீலபத்மநாபன்

4.உறவுகள் -நீல பத்மநாபன்

5 சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கௌதமன்

6. கருக்கு -பாமா

7. புதியதோர் உலகம்– கோவிந்தன்.

8. நிலாக்கள்தூர தூரமாய் – பாரததேவி

9. நிறங்களின் உலகம்– தேனி சீருடையான்

10. உண்மைகலந்த நாட்குறிப்புகள் -அ.முத்துலிங்கம்

ஜெ

*

அன்புள்ள ஜெ,

சிறையிலிருந்து வெளிவந்த எம். ஆர் . ராதாவைப்பேட்டி கண்டு விந்தன் தினமணி கதிரில் தொடராக எழுதிய சிறைச்சாலை நினைவுகள்(?) உண்மையிலேயே மினி சுயசரிதம் எனும் தகுதி பெறக்கூடிய ஒன்று. சில விடுபட்ட, மறைக்கப்பட்ட பகுதிகள் இருந்தாலும் பல விஷயங்களில் ராதாவிற்கே உரிய முகத்திலறையும் நேரடித்தனம் நிரம்பியது. அப்பட்டமாகப் பேசப்படும் பல தகவல்களால் ஆவணமாகும் அளவுக்கு முக்கியமானது.

அருணகிரி

*

அன்புள்ள அருணகிரி,

தன்வரலாறுகளுக்கு ஒரு இரண்டாம்பட்டியல் போடமுடியும் என்றால்

1. நனவிடைத் தோய்தல் – எஸ்.பொன்னுதுரை

2  ஈழப்போராட்டம் எனது சாட்சியம்- சி. புஷ்பராஜா

3. நாடுவிட்டு நாடு வந்து – முத்தம்மாள் பழனிச்சாமி

4 தூக்குமரநிழலில் -சி.ஏ.பாலன்

5. விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்[தன் வரலாறு]- [தொகுப்பு மு இளங்கோவன்]

ஆகியநூல்களையும் சொல்வேன்

 

ஜெ

முந்தைய கட்டுரைஅழகிய அசடுகள்
அடுத்த கட்டுரைஎன் சரித்திரம் இணையத்தில்