தத்துவ முகாம், புத்தாண்டு கொண்டாட்டம்

வரும் டிசம்பர் 29,30 மற்றும் 31 தேதிகளில் தத்துவ அறிமுகம் இரண்டாவது வகுப்புகள் நிகழும். வழக்கமான இடத்தில்.

முதல் தத்துவ வகுப்பில் பங்கெடுத்தவர்கள் இரண்டாம் வகுப்பில் பங்கெடுக்கலாம். முன்னர் இரண்டாம் வகுப்பில் பங்கெடுத்தவர்கள் மீண்டும் பங்கேற்க விரும்பினால் கலந்துகொள்ளலாம். முதல் வகுப்புக்கு வராதவர்கள் தத்துவ வகுப்பில் பங்கெடுக்க வேண்டியதில்லை.

தத்துவ முகாம் டிசம்பர் 31 மதியம் நிறைவுறும். 31 மதியம் முதல் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடங்கும்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நம் நண்பர்கள் எவரும்  கலந்துகொள்ளலாம். தத்துவ முகாமில் கலந்துகொள்பவர்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அப்படியே தொடர விரும்புபவர்கள் தொடர்ந்து தங்கலாம்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தங்க விரும்புபவர்கள் 31 மதியம் முதல் கலந்துகொள்ளலாம். ஜனவரி 1  மதியத்துடன் நிகழ்வு முடியும்.

புத்தாண்டுக்கொண்டாட்டம் என்பது வெறுமே நண்பர் சந்திப்பும், இலக்கிய உரையாடலும் மட்டுமே. விருந்து ஏதுமில்லை. இலக்கிய, மெய்யியல், கலை ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமான சந்திப்பு இது.

தொடர்புக்கு

[email protected]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது முதல்நாள், 2023
அடுத்த கட்டுரைதேவிபாரதிக்கு சாகித்ய அக்காதமி