கே.ஜி. சந்திரசேகரன் நாயர்

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் அலுவலகப் பணிநிறைவுக்குப்பின் தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். திருக்குறள் மொழியாக்கம் முதல் படைப்பு. திருமந்திரம், திருவாசகம் ஆகியவற்றை தொடர்ந்து மொழியாக்கம் செய்தார். சைவத்திருமுறைகள் ஒன்பது நூல்கள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் மொழியாக்கம் செய்தார். உ.வே.சாமிநாதையரின் எனது ஆசிரியர் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு) நூலை மொழியாக்கம் செய்துள்ளார். மறைவின்போது இராமலிங்க வள்ளலார் படைப்புகளை மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார். தமிழிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட செவ்வியல்படைப்புகளை மலையாளத்திற்கு மொழிமாற்றம் செய்தார்.

கே.ஜி. சந்திரசேகரன் நாயர்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் உரைகள்
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு