ஷாகீரின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எஸ்.எம்.ஷாகீர் அவர்களின் விண்ணிலிருந்து வீழ்ந்த பெண் ஒரு அழகான கதை. ஒரு மாஜிக்கல் ரியலிச கதை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் முடியும்போது நுட்பமான ஒரு பகடிக்கதையாக ஆகிவிட்டது. பணக்காரனுக்கு ஒன்றுமே தெரியாது. அப்பாவி. அவனுக்கு தேவையானபோது வானிலிருந்தோ கடலில் இருந்தோ பெண்கள் வருகிறார்கள். அவன் என்னதான் செய்வான், பாவம்.

மா. செந்தில்நாதன்

அன்புள்ள ஜெ

எஸ்.எம்.ஷாகீரின் அரசியல்வாதி கதை புதுமைப்பித்தன் எழுதிய சில கதைகளை நினைவுபடுத்தியது. எழுத்தாளனின் வீம்பும் வெட்டிப்பெருமிதமும் வறுமையும் கடைசியில் தன்வெறுப்பும் வெளிப்பட்ட கதை. ஷாகீரின் கதைகள் எல்லாமே சுருக்கமாகச் சொல்லப்பட்ட அனுபவங்கள் போலிருக்கின்றன

ராஜ்

எஸ்.எம்.ஷாகீர்: தமிழ் விக்கி 

எஸ்.எம்.ஷாகீர் தமிழில் கதைகள்

முந்தைய கட்டுரையோக முகாம், டிசம்பர்
அடுத்த கட்டுரைபசியற்ற வேட்டை – கமலதேவி