அழகிய அசடுகள்

சமீபத்தில் நான் எழுதும் இரு படங்களுக்காக நடிக்க விழையும் புதுமுகங்களின் ஒளிக்காட்சித் துண்டுகளைப் பதிவுசெய்துவந்து எனக்குக் காட்டினார்கள் இயக்குநர்கள். நடிகைகளில் பெரும்பாலும் எல்லாருமே அழகிகள். ஆனால் எல்லாருமே ஒரே மாதிரி ஒப்பனைசெய்து, ஒரேபோல நின்று, ஒரேபோலக் கையசைத்து, ஒரேபோல முகம் திருப்பி முடிதள்ளி சிரித்து, ஒரேபோன்ற உச்சரிப்பில் பேசினார்கள். ஆச்சரியமென்னவென்றால் உளறல்கள் மட்டும் வேறுவேறு.

படமெடுக்கும் உதவி இயக்குநர் ‘உங்க பேரென்னம்மா?’ என்று கேட்க வசீகரமாக நாணி, முடியைத் தள்ளிக் கண்களை சுழற்றி யோசித்து, புருவம் தூக்கிப் பிரியமாக ஆச்சரியப்பட்டு, ‘வெல்…ஆக்சுவலி மை நேம் இஸ் ஸாத்னா’ என்றார்கள். ‘எந்தூரும்மா?’ அதற்கும் அதேபோன்ற பாவனைகளுடன் ‘வெல்..யூ நோ…ஆக்சுவலி…அட் த எண்ட் ஆஃப்த டே..’

இதையெல்லாம் சில நிறுவனங்கள் கடும் கட்டணம் வாங்கிக் கற்றுக்கொடுக்கின்றன. நிறையப் பயிற்சிகள் உண்டாம். பயிற்சி வழியாக மூளையைக் காலிசெய்கிறார்களா இல்லை காலிசெய்வதற்காகத் தனிப் பயிற்சி உண்டா தெரியவில்லை. யாரைத் தேர்வு செய்யலாமென்று மண்டை குழம்புவது இதனால்தான். அவர்களுக்கு நடுவே வேறுபாடே இல்லை.

நண்பர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். தமாஷாக இருந்தது. என்ன மேதாவித்தனமான கருத்துக்கள். நம் பிளாக்கர்கள், டிவிட்டர்கள், பஸ்ஸர்கள்கூட இன்னும் பரவாயில்லை போல.

httpv://www.youtube.com/watch?v=9QBv2CFTSWU

முந்தைய கட்டுரையானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
அடுத்த கட்டுரைதன் வரலாற்று நாவல்கள்