குருகு ஒன்பதாவது இதழ் வெளிவந்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் ர. பூங்குன்றன் அவர்களின் நேர்காணல் இடம் பெறுகிறது. அவர் சங்ககால பெருவழி ஒன்றை கண்டுபிடித்தவர், கொங்கு நாட்டுப் பகுதியை முதன்மையாக ஆய்வுசெய்தவர்.
கிறிஸ்துவின் உருவங்கள் குறித்த தொடரை தாமரைக்கண்ணன், அவிநாசி எழுதுகிறார். துவக்க காலத்தில் குறியீடுகளாக இருந்த இயேசு கிறிஸ்துவின் உருவம் எப்படி வளர்ந்தது என்றும், அது உருவாக்கிய ஆன்மிக தாக்கத்தையும் கட்டுரையின் இந்தப் பகுதி பேசுகிறது.
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இந்திய தத்துவம், மரபு, கலை குறித்தான சிந்தனைகள் இங்கு வந்த ஐரோப்பிய, ஜெர்மான்ய அறிஞர்களால் நவீன உலகிற்கு அறிமுகமாக ஆரம்பித்தது, அதை தொடர்ந்து இந்திய மரபு பற்றிய ஏராளமான சிந்தனைகள் விவாதங்கள் ஐரோப்பிய, இந்திய சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்பட்டன. அந்த காலகட்டத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை குருகு இதழில் தொடர்ந்து வெளியிட நினைக்கிறோம். அவ்வாறு கடந்த இதழில் மோனியர் வில்லியம்ஸின் வேதம் குறித்தான கட்டுரை வெளிவந்தது தொடர்ச்சியாக இந்த இதழில் ஶ்ரீஅரவிந்தரின் வேதங்கள் குறித்த கட்டுரை வெளிவருகிறது.
புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் ராய் மாக்ஸின் ‘தே– ஒரு இலையின் கதை’ நூலிலிருந்து ஒரு பகுதி வெளிவருகிறது. குருகு–வின் தொடர்களான நாராயண குருவின் தெய்வ தசகம் மாயை குறித்து விவரிக்கிறது. அதன் அறிவியல் பார்வை போல அறிவியல் தொடர் ரியலிசத்தை பற்றி விவாதிக்கிறது.
தொடர்ந்து கிடைக்கும் வாசக எதிர்வினைகளுக்கு நன்றி. இந்த இதழும் எப்போதும்போல வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இதழாக அமையும் என்று நம்புகின்றோம்.
குருகு டிசம்பர் இதழ்
பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.
https://twitter.com/KuruguTeam
அன்புடன்
குருகு