யுவன் சந்திரசேகரின் பேட்டி. யுவன் இலக்கிய வாசகர்களின் எல்லையைக் கடந்து பொதுவாசகர்களுக்கும் சென்றுசேர இந்த வகைப்பேட்டிகள் உதவலாம். அண்மைக்காலமாக எங்கள் விருதுக்குப்பின் உருவாகியிருக்கும் (அல்லது உருவாக்கப்பட்ட) கவனம். பொதுவாசகர்களிடையே எழுத்தாளர் சென்றுசேர்வது அவர் எழுத்தின் முக்கியமான ஒரு திருப்புமுனை. இலக்கியவாசகர்களின் பயிற்சி அவர்களுக்கு இருக்காது. ஆனால் இலக்கியவாசகர்களின் முன்முடிவுகளும், படிந்துவிட்ட பழைய ரசனையும் இருக்காது. ஆகவே மிகச்சிறந்த வாசகர்கள் அங்கிருந்து எழுந்து வருவார்கள் என்பது என் அனுபவம்