மலேசியா பினாங்கு நகரில் ஜார்ஜ் டவுன் இலக்கியவிழா வரும் நவம்பர் 23 முதல் நான்குநாட்கள் நிகழ்கிறது. தமிழ்நாட்டிலிருந்து யுவன் சந்திரசேகர் கலந்துகொள்கிறார். மலேசிய எழுத்தாளர்களும் உலக எழுத்தாளர்களும் கலந்துகொள்ளும் அரங்கு இது.
இலக்கியவிழாவை ஒட்டி மலேசியா பிரம்ம வித்யாரண்யத்தில் யுவன் சந்திரசேகர் கலந்துகொள்ளும் இலக்கிய உரையாடல் நிகழ்வும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது