இலக்கிய ஆவணப்பட விழா

பொதுநூலகத் துறையும் சென்னை நூலக ஆணையகமும் இணைந்து வரும் நவம்பர்  14 முதல் நவம்பர் 20 வரை சென்னையில் ஓர் ஆவணப்பட விழாவை ஒருங்கிணைக்கின்றன. முழுக்க முழுக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் திரையிடப்படும் ஓர் இலக்கிய விழா இது. அனேகமாக இந்தியாவிலேயே இதுதான் இப்படிப்பட்ட முதல் திரைவிழா என நினைக்கிறேன். மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் உடைய ஒரு தொடக்கம் இது. ஒருங்கிணைக்கும் மனுஷ்யபுத்திரன் செய்வது ஒரு பெரும்பணி.

இடம் தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கம். அண்ணா சாலை சென்னை

முந்தைய கட்டுரைமூவினிமை (புதிய சிறுகதை)
அடுத்த கட்டுரைALTA விருது வியட்நாம் நாவலுக்கு…