வழி, இணைய இதழ்

அன்பு நிறை ஜெ

ஐப்பசி/அக்டோபர் 2023 வழி இதழில் சிறுபாணாற்றுப்‌ படையை ஆராய்ந்து அதில் வரும் ஊர்களின் பெயர் கொண்டு அந்த ஊர்களின் அமைவிடத்தை கண்டடைய மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய கட்டுரைசிறுபாணன் சென்ற பெருவழிவெளியாகியுள்ளது

தமிழ் சூழலில் ஓர் படைப்பை ஆராய்ந்து அதில் வரும் நிலத்தை தேடி பதிவு செய்யும் முயற்சி அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது. அதுவும் ஆற்றுப்படை நூல்களை பயண இலக்கிய அடிப்படையில் முன்வைத்து எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை அரியதொரு முயற்சி.

வெண்முரசு போன்ற மகா காவியத்தின் நிலவியலையும், அரசியலையும், மாந்தர்களை அணுக்கமாய் அறிந்துகொள்ள பாரத நிலத்தில் புறவயமாக பயணம் செய்வது அடிப்படையான ஒன்று, அவ்வகை பயணங்கள் ஒருவர்க்கு அமையப் பெறுவது அரிதினும் அரிது. எழுத்தாளர் சுபஸ்ரீ அத்தகைய பயணம் ஒன்றை மேற்கொண்டு தன் அறிதல்களையும், அனுபவங்களையும் தொகுத்து வெண்முரசின் ஊடக பாரத பயணத்தின் கதைகளைவாழிய நிலனேஎன்ற தலைப்பில் தொடராக எழுதியுள்ளார்.

உலக இலக்கிய பரப்பில் அனைவருக்கும் பரிச்சயமான  “லார்ட் ஆப் தி ரிங்ஸ்படைப்பில் வரும் நிலத்தை இயன் பிராடி என்ற எழுத்தாளர் தேடி சென்று சில புத்தகங்கள் எழுதியுள்ளார்அதுபோன்றதொரு படைப்பை பெருவிசை கொண்டு சுபஸ்ரீ செய்துள்ளார், இந்த தொடர் கட்டுரைகள் வெண்முரசை வாசிக்க துவங்குபவர்களுக்கும், வாசித்து முடித்தவர்களுக்கு நெடும் வழியை திறக்கும்.

இந்த கட்டுரைகளை பற்றி உரையாடுகையில்வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒட்டுமொத்தத்தின் பின்னணியில் வைத்து புரிந்து கொள்வது அவசியம், அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்என சுபஸ்ரீ குறிப்பிட்டார். இந்த கட்டுரைகளை தமிழ் பயண இலக்கியத்தின் ஓர் மைல்கல்லாக நான் கருதுகின்றேன், வெண்முரசின் வாசகர்கள் அனைவரும் இந்த தொடர் கட்டுரைகள் பாரத தரிசனத்தை அளிக்கும் என எண்ணுகின்றேன்.  

இந்த இதழில்,  சாளை பஷீரின்என் வானம் என் சிறகுகட்டுரையின் அடுத்த பகுதியும், இதழாளர் சமஸின்லண்டன்பயண கட்டுரை தொடரும் வெளியாகியுள்ளது.  

என் வானம் என் சிறகு”  பரிசல் பதிப்பக வெளியீடாகவும், “லண்டன்அருஞ்சொல் பதிப்பக வெளியீடாகவும் வந்துள்ளன, வாய்ப்பிருக்கும் நண்பர்கள் புத்தகமாக இந்த கட்டுரைகளை வாசிக்கலாம்.

நன்றி,

இளம்பரிதி

பதிவுகளுக்கான இணைப்புகள்

சிறுபாணன் சென்ற பெருவழி

வாழிய நிலனே

லண்டன்

முந்தைய கட்டுரைஆலம்- வி.எஸ். செந்தில்குமார்
அடுத்த கட்டுரைதமிழன்பன்