நீலி, உமா மகேஸ்வரி சிறப்பிதழ்

அன்பு ஆசிரியருக்கு,

நீலியின் ஆறாவது இதழ் (நவம்பர் 2023) வெளிவந்துள்ளது. இவ்விதழை எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் படைப்புலகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடலாம் என நண்பர்கள் முடிவு செய்த போது அவரின் படைப்புகளை வாசிக்கவும், தொகுத்துக் கொண்டு உரையாடவும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டோம்.

உமாமகேஸ்வரியுடனான உரையாடல் அவர் அனுமதித்த தொலைவு எடுத்துள்ளோம். உரையாடல் அவருடைய படைப்புகளை மேலும் புரிந்து கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது.

உமாமகேஸ்வரியின் புனைவுலகம் சார்ந்த ரசனை, விமர்சனக் கட்டுரைகளை எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், கமலதேவி, சுசித்ரா ஆகியோரும், நண்பர்கள் விக்னேஷ் ஹரிஹரன், மதுமிதா, நந்தகுமார், சக்திவேல், ரம்யா ஆகியோரும் எழுதியுள்ளனர். இரு வாசிப்பனுவங்களை கவிஞர்கள் கல்பனா ஜெயகாந்த், தென்றல் சிவக்குமார் எழுதியுள்ளனர்.

இத்துடன் இசையின் ஒளவையார் கட்டுரைத்தொடரில் இம்முறை புறப்பாடல் குறித்த இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளது. சைதன்யா உலகப் பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுதும் கட்டுரைத் தொடரில் இம்முறை ”சிமோன் வெயில்” பற்றி எழுதியுள்ளார்.

நித்ய சைதன்ய யதியின் துர்கை பற்றிய கட்டுரை நண்பர் கதிரேசன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. இது ஆனந்தகுமாரசாமியின் ”ஸ்ரீ லஷ்மி” கட்டுரையின் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். கலைமகள் பற்றிய கட்டுரை கிடைத்தால் இந்தத் தொடர் பூர்த்தியடையும். மதுமிதா, கதிரேசன் ஆகியோரின் முதல் படைப்பு இவ்விதழில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலி இதழ் 

முந்தைய கட்டுரைகூவுதலின் அழகியல் -கடிதம்
அடுத்த கட்டுரைபிரபந்தம், கடிதம்