வல்லினம் இணைய இதழ் நவம்பர் மாதம் யுவன் சந்திரசேகர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பாரதி மூர்த்தியப்பன் எழுதிய தனியனின் பெருவெளி, யுவன் கவிதைகள் பற்றி கணேஷ் பாபு எழுதிய தீராத ருசி, குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலை முன்வைத்து லோகேஷ் ரகுராமன் எழுதிய ஒருவட்டம் பல மையங்கள், விக்னேஷ் ஹரிஹரன் வெளியேற்றம் நாவல் பற்றி எழுதிய யாதெனின் யாதெனின் நீங்கியோர் கதை, ம.நவீன் எழுதிய சோழிகளை விற்கும் புனைவுக்கலைஞன் ஆகிய கட்டுரைகளும் யுவன் சந்திரசேகரை ம.நவீன் எடுத்த பேட்டியும், யுவன் எழுதிய ரசவாதம் என்னும் கதையும் இடம்பெற்றுள்ளன