ஒரு தொடக்கம்

கடந்த பத்தாண்டுகளாகவே நான் சொல்லிவருவது ஒன்றுண்டு, புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறைகள் அங்கே தங்கள் இருப்பையும், தங்கள் பண்பாட்டின் தனித்தன்மையையும் இலக்கியரீதியாக எழுதி நிறுவவேண்டும் என்பதுதான் அது. தமிழிலிருந்து ஆங்கிலம் செல்லும் தமிழ்ப்படைப்புகள் மேல் கவனம் விழுவதற்கான வழி அது.

அத்துடன் அந்த ஆங்கில எழுத்துக்கள் வழியாகவே தமிழ் எழுத்துக்கள் உருவாக்கும் பண்பாட்டுப்பின்புலம் அங்குள்ள வாசகர்களுக்கு அறிமுகமாகும். எந்த மொழி இலக்கியமும் தனியாக மொழியாக்கம் செய்யப்பட்டால் உரிய வாசிப்பை அடையாது. அந்த மொழியில் இருந்து முக்கியமான படைப்புகள் ஒரு தொகையாகவே வாசிக்கக் கிடைக்கவேண்டும். அவற்றின்மேல் ஒரு உரையாடலும் உருவாகவேண்டும். அதற்கு வழிவகுப்பவை அங்கு பிறந்த நம் இளைய தலைமுறையினர் எழுத்தாளர் ஆவது.

ஆர்.எஸ்.சகா தமிழிலக்கியத்தை அறிந்தவர். கி.ராஜநாராயணனின் எழுத்துக்களால் கவரப்பட்டவர். தமிழ் ஆங்கில மொழியாக்கங்களில் உதவுபவர். அவருடைய கதை ஒன்று குறிப்பிடத்தக்க ஆங்கில இலக்கிய படைப்புத்தொகைநூல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. தமிழுக்கே இது ஒரு நல்ல தொடக்கம்.

ஆர்.எஸ்.சகா கதை – தொகுதி Trans Rites: An Anthology  

முந்தைய கட்டுரைகனடா உரையாடல், கடிதம்
அடுத்த கட்டுரைபெண் எனும் விரிவு, கன்னியாகுமரி- கடிதம்