ஆசிரியர் சௌந்தரின் யோக முகாம், மீண்டும்

யோக ஆசிரியர் சௌந்தர் இலங்கை சென்று திரும்புயிருக்கிறார். இலங்கையின் முதன்மை நாளிதழ்களில் அவருடைய  யோகநிகழ்வின் செய்திகளையும், அவற்றின் மீதான உளப்பதிவுகளையும் விரிவாக வெளியிட்டமை நிறைவளிக்கிறது. இங்கே அவர் நடத்திய யோகப்பயிற்சி நிகழ்வுகளில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் அவை அளித்த பயன்களை பெரும் உளநெகிழ்வுடன் பதிவுசெய்துள்ளனர்.

யோகப்பயிற்சி மூன்று நிலைகளில் பயனுள்ளது.

ஒன்று, அன்றாடவாழ்க்கையை ஒழுங்கமைக்க. செயல்களில் உளம்குவியவும், உடல் அதற்கு இயல்பாக ஒத்திசையவும் யோகம் உதவுகிறது.

இரண்டு, உடல்நலச்சிக்கல்கள் பலவற்றை யோகம் சீரமைக்கிறது. யோகப்பயிற்சி நோய்களை குணமாக்குவதில்லை. அது சிகிழ்ச்சைமுறை அல்ல. ஆனால் நோய்களுக்குக் காரணமாக அமையும் வாழ்க்கைமுறைச் சிக்கல்களை யோகம் சீரமைக்கிறது. அவ்வாறாக நலமடைய உதவுகிறது

மூன்று, யோகம் ஆன்மிக விடுதலைக்கான பாதை. அறிந்தவற்றை ஆழ்ந்த அனுபவமாக ஆக்கிக்கொள்ளும் வழி அது

மீண்டும் ஒரு யோகப்பயிற்சி ஈரோடு அருகே வழக்கமான மலைத்தங்குமிடத்தில் நிகழும்.

நாள் நவம்பர் 17, 18 ,19 (வெள்ளி சனி ஞாயிறு)

அனைவரும் பங்குகொள்ளலாம்

நிகழ்வு ஞாயிறு மதியம் நிறைவுறும்.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்க [email protected]

முந்தைய கட்டுரைஅச்சத்தின் கொண்டாட்டம்
அடுத்த கட்டுரையோகமெனும் விடுதலை , கடிதம்