எஸ். அண்ணாமலை ஓர் எழுத்தாளர் அல்ல. கோவில்பட்டி வணிக பிரமுகர்களில் ஒருவர். அவ்வூருக்கு அருகில் உள்ள இடைசெவல் சிற்றூரில் வசித்து வந்த எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன் மற்றும் கு. அழகிரிசாமியோடு கோவில்பட்டியில் இருந்த இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஆகவே, இயல்பாக அவருக்கு இலக்கியத்தில் ஒரு ஈடுபாடு இருந்தது. இதனால் ‘ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும்’ என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. தன்னிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை மூலதனமாக வைத்து நீலக்குயில் இதழை தொடங்கினார்.