ந. ஜயபாஸ்கரனின் கவிதைகள் தனிமனிதன் அக அலைக்கழிவுகள் என தோன்றினாலும் தனிமனிதன் என்னும் சிறுதுளிக்குள் காலம், வெளி, கலாச்சாரம், வரலாறு ஆகியவை திகழ்வதையும் அலைகொள்வதையும் சித்தரிப்பவை. மிகக்குறைவாக எழுதியவர் என்றாலும் தமிழ்க்கவிதையில் மிக அரிய சில கவிதைகளை எழுதியவர் என மதிப்பிடப்படுகிறார்.