Naina Barse Rim Zim – Lata Mangeshkar
அருணாசலப்பிரதேசம் சென்றபோது நடுப்பகலில் மொத்த உலகமும் கறுப்புவெள்ளையாக ஆகிவிட்டது. பனிவெளியில் இரண்டே நிறங்கள்தான். அவை நிறங்கள் அல்ல. ஒளியும் ஒளியின்மையும். பனியை வண்ணப்படங்கள் நீலநிறமாக காட்டுகின்றன. மெய்யான அழகும் பயங்கரமும் வெளிப்படுவதில்லை. இந்தப்பாடலை அதற்காகவே பலமுறை பார்த்தேன்