சுருதி டிவி நிதியுதவி

கபிலன், சுரேஷ் இணைந்து நடத்தும் சுருதி டிவி தமிழிலக்கியத்திற்கு பெரும்பணியாற்றி வருகிறது. என்னுடைய ஏறத்தாழ எல்லா காணொளிகளையும், விஷ்ணுபுரம் காணொளிகளையும் அவர்களே பதிவுசெய்து வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் இலக்கிய நிகழ்வுகளை பதிவுசெய்வதன் மூலம் இலக்கிய இயக்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

இலக்கியத்திற்கு இடம் கொடுப்பதனால் அவர்களிஅன் சானல் இன்றைய போட்டியில் பின்னடைவு கொள்கிறது. அத்துடன் அவர்களின் உரைகளை வெட்டி வெளியிடுபவர்கள் அவர்களுக்கான வரவுகளை குறைக்கிறார்கள்.

சுருதி டிவி நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், வாசகர்களிடம் உதவி கோருவதாகவும் அறிவித்துள்ளனர். அவர்கள் முதன்மையாகக் கோருவது ரூ 5000 சந்தா செலுத்தும் உறுப்பினர்களை. நன்கொடைகளையும் வரவேற்கிறார்கள்.

சுருதி டிவி வெளியிட்டுள்ள என் உரைகளை வெட்டி பலர் வலையேற்றியுள்ளனர். அவை சட்டமீறல்கள். சுருதி டிவி அவர்கள்மேல் புகார் அளிக்கலாம். நானும் புகார் அளிப்பதாக உள்ளேன்.

நிதி உதவிக்கு

ஷ்ருதி டிவியின் gpay எண்கள்:
9176285624 – Suresh Kumar
9444449221 – Kabilan
முந்தைய கட்டுரைதனிமொழி
அடுத்த கட்டுரையுவன் சந்திப்பு – சக்திவேல்