நவீன ஓவியக்கலையும் இன்றைய வாழ்க்கையும்…

நவீன ஓவியக்கலையை ரசிக்கும் பயிற்சி.

ஒரு கதை. ஒரு நவீன ஓவியக்கண்காட்சிக்குள் நுழைந்த ஒருவர் ஓவியரிடம் சென்று மனம்விட்டுப் பாராட்டினார். “அற்புதமானஓவியம். தத்ரூபம். அபாரம். மெய்மறந்துட்டேன்

ஓவியர் மகிழ்ந்துரொம்ப நன்றிஎன்றார். அவருக்கு மிகவும் பெருமை.

அழகான ஓவியம்….மிகமிக தத்ரூபம்… வாயில் எச்சில் ஊறிவிட்டதுஎன்றார் ரசிகர்

அப்படியா? நான் சூரிய உதயத்தை அல்லவா வரைந்திருந்தேன்?” என்றார்ஓவியர்

சூரிய உதயமா? நான் ஆம்லேட் என நினைத்தேன்என்றார் ரசிகர்

இந்த ரசிகரின் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம். நவீன ஓவியங்கள் இன்றைய நாகரீகத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. அவற்றை அறியாமல் ஒரு நவீன வாழ்க்கைச் சூழலுக்குள் புழங்கமுடியாத நிலை உருவாகி விட்டது. மேலைநாடுகளில் நவீன ஓவிய அங்குள்ள கல்வியின் ஒரு பகுதியாகவே உள்ளது. நமக்கு அப்படி ஒரு கல்வி எங்கும் அளிக்கப்படுவதில்லை. ஆகவே நவீன ஓவிய அறிமுகம் இல்லாதவர்களாகவே இருக்கிறோம். நம் அப்பாவித்தனத்தை உளறி வைக்கவும் செய்கிறோம்.

உண்மையில் நவீன ஓவியங்களை ரசிப்பது ஒன்றும் அரிய விஷயம் அல்ல.  குறைந்த பட்ச  கலைரசனை இருந்தால், சில அடிப்படைகளை அறிந்துகொண்டால், சட்டென்று நவீன ஓவியங்கள் நம்மிடம் உரையாடத் தொடங்கிவிடுவதை ஆச்சரியத்துடன் காணலாம். நவீன ஓவியத்துக்கு ஒரு வரலாறு உள்ளது. சில கொள்கைகள் உள்ளன. அவற்றை முறையாக உதாரணங்களுடன் அறிந்துகொண்டால் போதுமானது.

நாம் இன்றைய கட்டிடக்கலை, ஆடைவடிவமைப்பு, ஃபேஷன் டிசைன் , டிஜிட்டல் ஆர்ட் உட்பட அனைத்தையும் புரிந்துகொள்ள ஓவியக்கலை அறிமுகம்  தவிர்க்கமுடியாதது. நவீன ஓவியக்கலை அறிமுகம் இன்றி நல்ல புகைப்படக்காரர் ஆக முடியாது.

அத்தகைய ஓர் ஓவிய அறிமுக நிகழ்வை ஓவியர், புகைப்பட நிபுணர், கலைக்கோட்பாட்டாளர் .வி. மணிகண்டன் அறிமுக வாசகர்களுக்காக நடத்தவிருக்கிறார். இடம் வழக்கமான மலைத்தங்குமிடம். ஈரோடு.

நாள் செப்டெம்பர் – 22. 23 24 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள்

[email protected]

என்னும் விலாசத்துக்கு எழுதலாம்

ஜெ

முந்தைய கட்டுரைபயண இலக்கியத்தின் அழகியல்
அடுத்த கட்டுரைஉமது குடி பெருகட்டும்…கடிதம்