புத்தரிடம் – ஷாகுல் ஹமீது

ஆசிரியருக்கு வணக்கம்,

கடந்த ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கன்னியாகுமரி அருகில் பயணிக்கிறேன்.

அமெரிக்க பயணத்தில் இருக்கும் பவா செல்லத்துரை அவர்களை அழைத்து போது  “ஷாகுல் இப்போது எங்கே பயணம் ” எனக்கேட்டார்.

“நாகர்கோவிலில் இருந்து 50 மைல் தொலைவில் இருக்கிறேன்” என்றேன்.

“இறங்குனா உங்க ஆசான போய் பாத்துட்டு வரலாமே” என சொன்னார்.

நோய் தொற்று காலத்திற்கு பின் கப்பல் காரர்களின் கால் தரையில் படுவது முற்றிலும் நின்று போயிருந்தது. கடந்த இரண்டரை மாதங்களாக நிலம் கண்ணில் படா ஆழ்கடலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். நான் தற்போது இருக்கும் எல் பி ஜி கப்பல்களில் தரை இறங்குவதை நினைத்தே பார்க்க முடியாது. கடந்த ஞாயிறு அன்று கப்பல் வியட்னாமின் வாங் தாவ்  துறைமுகத்தில் சரக்குகளை இறக்குவதற்காக நின்றபோது வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது அருகில் உள்ள  தி வாய் மலைமேல் உள்ள புத்த மடாலயத்துக்கு போய் வந்தேன் அங்கிருந்து கீழே இறங்குகையில் உணர்ந்தேன் அது புத்தரின் அழைப்பு என.

ஷாகுல் ஹமீது.

புத்தரிடம் …

முந்தைய கட்டுரைதேவை கான்ஸ்டன்ஸ் கார்னெட்டுகள்…
அடுத்த கட்டுரையுவன் -கடிதங்கள்