அணி கடிதம், மரபின்மைந்தன் முத்தையா

அன்புள்ள திரு ஜெயமோகன்

வணக்கம்

அணி சிறுகதை படித்தேன்.

இரண்டு திருமடங்கள் பெயர் சுட்டப்பட்டு இருப்பதால் இரண்டு விஷயங்கள்.

1. திருப்பனந்தாள் திருமட அதிபரை சன்னிதானம் என்றோ பண்டார சன்னதி என்றோ சொல்லும் வழக்கம் கிடையாது.

அவர்களுக்கு குருபீடம் தருமபுரம் ஆதலால் தருமபுர ஆதீனம் தான் அவர்களுக்கு சன்னிதானம். எனவே திருப்பனந்தாள் திருமட அதிபர் எஜமான் சுவாமிகள் என்று மட்டுமே அழைக்கப்படுவார்.

2. ஏற்கனவே சொன்னது போல அவர்கள் குருபீடம் திருவாவடுதுறை மடம் அல்ல.

3. சைவத்திருமடங்கள் பட்டினத்தாரை மறுதலிப்பதில்லை.”அப்பாலும் அடி சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்என்னும் வகைமையின் கீழ் அவரும் வணங்கப்படுகிறார்.

மரபின்மைந்தன் முத்தையா

கூழங்கைத் தம்புரான் தமிழ்விக்கி

அன்புள்ள முத்தையா,

கூழங்கை தம்புரான் என்னும் உண்மையான ஆளுமையை பற்றிய கதை என்பதனால் பெயர் சுட்ட நேர்ந்தது.   இந்தச் சம்பிரதாயங்கள் நானறிந்ததில்லை. மாற்றிவிடுகிறேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் சைவ மடங்கள் பட்டினத்தார் மற்றும் சித்தர் பாடல்களை ஏற்றுக்கொண்டதில்லை என்றே பலர் எழுதியுள்ளனர். சைவமடங்களிலுள்ள பண்டாரங்கள் குறிப்பாக. 

ஜெ

அணி (புதிய சிறுகதை)

முந்தைய கட்டுரைவனத்தில் வாழ்பவன்
அடுத்த கட்டுரைவெந்தயநிறச் சேலை