உமது குடி பெருகட்டும்…கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சென்ற தத்துவ வகுப்பில் பழங்குடிகளைப் பற்றி பேசும் பொழுது,  புது/வெளியாட்களை அவர்கள் ஏற்பார்கள்,  தங்களுடன்இனைத்துக் கொள்வார்கள் என்று கூறியது என்னை சிந்திக்க வைத்தது.

தற்போதுள்ள பழங்குடிகள் தங்களுடன் வெளியாட்கள் யாரையும் இணைப்பதில்லை (அந்தமானில் வசிக்கும் செங்கலி பழங்குடியினர் இதற்கு ஒரு நல்ல உதாரணம்) ஆனால் உலக வரலாற்றில் முந்தைய காலகட்டங்களை பார்த்தால் குடிகளுடன் இணைப்பு சர்வ சாதாரணமாக  நடந்திருக்கிறது. அரசர்களை வாழ்த்தும் பொழுது உன் குடி பெருகட்டும் என்றே வாத்துகிறார்கள். பெண்களை வாழ்த்தும்போது உன் குலம் தழைக்கட்டும் (மூதன்னை ஆதல்) என்றே கூறுகிறார்கள்  வெண்முரசுவிலும் அப்படித்தான் இருக்கிறது.

எனது பதின்ம வயதில் star trek series புத்தகம் ஒன்றில் வெளி கிரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள், May Our Tribe incraese என்று சொல்லுவதோடு அந்த கதை முடியும். வெகு நாட்களுக்கு அந்த வரியின் மேல் பித்தாக இருந்தேன். இந்த வரிகளுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்று இப்பொழுது தான் புலப்படுகிறது.

தமிழில் குடி, குலம், கோத்திரம், இனம் ரொம்ப குழப்பம் இல்லாமல் பயன்பாட்டில் இருப்பது போன்று தோன்றுகிறது. அதுவே ஆங்கிலத்தில் அதை பயன்படுத்தும் பொழுது ஒரு மாதிரி ஒரு நெகிழும் தன்மையுடன் தான் பயன்படுத்துகிறார்கள் ( clan, tribe , ethnic, race) இந்திய மொழிகளில் இன்றும் குடி மக்கள்/பிரஜை என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கிறது. Tribe என்பதன் மூலச் சொற்களைப் பார்த்தால் அது ஒரு PIE

Trinity என்பது கிட்டத்தட்ட அதிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் tribe என்பது ஒரு அவமதிப்பு சொல்லாகவே இன்று இருக்கிறது. Tribe to  citizens  ஆகிவிட்டது.

” உமது குடி பெருகட்டும்” என்ற ஆங்கிலச் சொற்றொடர் முதன் முதலில் லி ஹண்ட் என்பவரால் ஒரு கவிதையில் கூறப்பட்டுள்ளது.

இப்ராஹிம் பென் ஆதெம் என்று புகழ்பெற்ற இஸ்லாமிய சூஃபி துறவிக்காக எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

Abou Ben Adhem

BY LEIGH HUNT

Abou Ben Adhem (may his tribe increase!)

Awoke one night from a deep dream of peace,

And saw, within the moonlight in his room,

Making it rich, and like a lily in bloom,

An angel writing in a book of gold:—

Exceeding peace had made Ben Adhem bold,

And to the presence in the room he said,

“What writest thou?”—The vision raised its head,

And with a look made of all sweet accord,

Answered, “The names of those who love the Lord.”

“And is mine one?” said Abou. “Nay, not so,”

Replied the angel. Abou spoke more low,

But cheerly still; and said, “I pray thee, then,

Write me as one that loves his fellow men.”

The angel wrote, and vanished. The next night

It came again with a great wakening light,

And showed the names whom love of God had blest,

And lo! Ben Adhem’s name led all the rest.

இதை யாரேனும் தமிழில் மொழியாக்கம்  செய்தால் அருமையாக இருக்கும். நான் சிறிது முயன்றேன் ஒன்றும் சரியாக வரவில்லை.

இக்கவிதையில் வரும் தங்கப் புத்தகம் சைவத் திருமுறைகளில் வரும் ஒரு பாட்டில் கூறப்பட்டுள்ளது போல் உள்ளது”

அமரர் அவனுக்கு முன் நின்று அறுகம்புல் சாத்துவர். தன் பெயரை எழுதும் புத்தகத்தில் என் பெயரையும் எழுதுமாறு செய்பவன்.  “

பதினோராம் திருமுறை

11.1. கோயில் நான்மணிமாலை

இதிலும் புத்தகத்தில் தன் பெயரை எழுதுமாறு வேண்டுகிறார்.

எதிர்காலத்தில் குடிகளை பற்றி யோசிப்பவர்கள், தற்போது புழக்கத்தில் உள்ள குடிமகன் (drunkard) என்ற வார்த்தையும் சேர்த்து குழப்பி அடிக்கலாம்

அன்புடன் ,

மீனாட்சி

முந்தைய கட்டுரைநவீன ஓவியக்கலையும் இன்றைய வாழ்க்கையும்…
அடுத்த கட்டுரைமுகில்களும் குகைகளும் – கடிதங்கள்