சோர்வுநிலை, சலிப்பு, செயலின்மை ஆகியவற்றைப் பற்றி நீங்கள் எழுதிய பதில்களைக் கண்டேன். இந்தச் சோர்வுநிலை எதிலிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக உள்ளது. எதிலும் கவனம் குவிக்காத நிலை. எதையும் செய்யமுடியாத நிலை. இளையர், குறிப்பாக ஆண்கள், இந்த நிலையில் உள்ளனர். ஓர் ஆசிரியராக உங்கள் கட்டுரைகள் எனக்கு மிகவும் உதவின. அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துள்ளேன். தேவையான மாணவர்களுக்குக் கொடுக்கலாமென நினைக்கிறேன்.
இந்தப்பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது என்று படுகிறது. உங்கள் தளத்தில் சோர்வு ஒரு கடிதம் என்ற கடிதத்தையும் பதிலையும் கண்டேன். 2010 ல் எழுதப்பட்ட கடிதம். அதை எழுதியவர் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது என்ன சொல்கிறீர்களோ அதையே அப்போதும் சொல்லியிருக்கிறீர்கள்.
இக்கட்டுரைகள் நம்பிக்கையை அளிக்கின்றன, வெறும் சொற்களாக அல்ல. தர்க்கபூர்வமாகவும் அன்புடனும் அனுபவப்பின்புலத்துடனும் சொல்லப்படுகின்றன.
சதானந்த்
*
அன்புள்ள சதானந்த்
நான் எதிர்வினைகள் வழியாகவே என் புரிதல்களை அடைகிறேன். அவை இருபதாண்டுகளாக நாளும் வந்துகொண்டிருக்கின்றன
ஜெ
*
அன்பான ஜெ