சலீல் சௌதுரியின் முத்திரைப்பாடல்களில் ஒன்று. மெட்டு அரிதான ஒரு கலவை. அஸாமிய நாட்டுப்புற மெட்டு மேலையிசையின் அமைப்புக்குள் முளைத்தெழுந்திருக்கும். மலையாளத்தில் அந்த மெட்டுகளுக்கு பாடலெழுதுவது பெரும் சவால். கண்ட இடங்களில் நிறுத்தங்கள் விழும். அதை வயலார் வென்றிருக்கிறார்
பூமாலப் பூங்குழலீ பூம்புலரீ
நீராட்டினு போரூ நீ
கிலும் கிலுகிலும் கிலுகிளிமரத் தோணி
ஒரு கதளியாற்றக் கிளியிரிக்கும்
தளிர்மரத்தோணி
கிலும் கிலு கிலும் கிலு களியரஞ்ஞாணம்
ஈ கரிமலைக்கு கன்னியாறு ஒரு குளிரரஞாணம்
ஒரு களியரஞ்ஞாணம்
பகல் கிழக்குதிக்கும்போள்
மலமுடிகள் மாறில் ஞொறிஞ்ஞிட்ட
மஞ்ஞுருகும்போள்
முங்கிக் குளிச்சு கேறள கமலப்பூவினு
புதியொரு நாணம்
இளம் வெயில் பரக்கும்போள்
என்ற முளம்தண்டின் குடிலினுள்ளில்
பவனுதிரும்போள்
உள்ளில் ஒளிச்சு நில்கண பகல் கினாவினு
புதியொரு தாகம்
பூமாலப் பூங்குழலீ பூம்புலரீ
நீராட வருக நீ
கிலும் கிலுகிலும் கிலு கிளிமரத் தோணி
ஒரு பச்சைப் பசுங்கிளி அமர்ந்திருக்கும்
தளிர்மரத்தோணி
கிலும் கிலு கிலும் கிலுங்கும் அரைநாண்
இந்த கரிமலைக்கு கன்னியாறு
ஒரு குளிர் அரைநாண்
பகல் கிழக்கே உதிக்கும்போது
மலமுடிகள் மார்பில் கொசுவமிட்ட
பனி உருகும்போது
முங்கி குளித்து கரையேறு கமலப்பூவுக்கு
புதியொரு நாணம்
இளவெயில் பரவும்போது
என் மூங்கில் குடிலினுள்ளே
பொன் நாணயங்கள் உதிர்கையில்
உள்ளே ஒளிந்து நிற்கும் பகற்கனவுகளுக்கு
புதியொரு தாகம்