தமிழில் எழுதிய பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.தமிழ் நவீன இலக்கியத்தில் அவர் அடையாளம் காணப்படவில்லை. க.நா.சு மிகத்தயங்கி பெண் எழுத்தாளர் என்னும் வரிசையில் ஓர் இடத்தை அவருக்கு அளிக்கிறார். அசோகமித்திரன் மட்டுமே அவரை பொருட்படுத்தியுள்ளார். நவீன இலக்கியத்தின் அழகியலென்பதே ‘அதிர்வூட்டும்படி புதிய ஒன்றைச் சொல்லுதல்’ என ஆகிவிட்டது. சூடாமணி அன்னையருக்குரிய கனிவு, ஒத்திசைவு, விவேகம் ஆகியவற்றை முன்வைத்தவர். ஆகவே நல்லுபதேசக் கதைகளை எழுதியவர் என அவர் ஒதுக்கப்பட்டார். ஆனால் இலக்கிய அழகியல் இன்னும் விரிவான அளவுகோல்களைக் கொள்ளும்போது சூடாமணி ஏற்படையக்கூடும்
தமிழ் விக்கி ஆர்.சூடாமணி