தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் முதல் காப்பியம் என பல அறிஞர்களால் சொல்லப்படுவது ஆலிப் புலவர் எழுதிய மிகுறாசு மாலை அல்லது மிஃராஜ் மாலை. இதன் செல்வாக்கால்தான் உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதினார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆலிப்புலவர் நாகர்கோயிலில் வாழ்ந்தவர். பாளையங்கோட்டையில் அடக்கமானார்.