துடிசைக்கிழார் கொங்குநாட்டின் மற்றொரு ஆளுமை. மரபான புராணமையப் பார்வை கொண்டவர். இலக்கியச்செய்திகளைக்கொண்டு வரலாற்றை உருவகிப்பது இவருடைய வழக்கம். உதாரணமாக, முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை – 13,500 ஆண்டுகள் இருந்ததாக துடிசைக்கிழார் தன் தமிழ்ச் சங்கங்களின் வரலாறு எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுமுறைமையும் முடிவுகளும் பொதுவாக புறவயமான ஆய்வுகளை நிகழ்த்தியவர்களால் ஏற்கப்படுவன அல்ல. துடிசைக்கிழார் இன்று அவருடைய திருமந்திரக் குறிப்புரைக்காக சைவ ஆய்வில் குறிப்பிடும்படியானவராக கணிக்கப்படுகிறார்.
தமிழ் விக்கி துடிசைக்கிழார்