அழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால்

நாஞ்சில்நாடன் அனைத்துக்கலைஞர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார். மேடையில் கலைஞர்களை நண்பர்கள் சென்று பார்த்து வணங்கிக்கொண்டே இருந்தனர், குப்பம் பேராசிரியர் பத்மநாபன் மேடையேறி வாழ்த்தியதும் ராமநாதன் நெகிழ்ந்துபோனார், அவர் கைகளை பற்றிக்கொண்டார். தூரனின் பாடல்களை நிறைவாக வாசிக்க வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது, இவற்றில் பலபாடல்கள் மறக்கப்பட்டுவிட்டன என்றார். அவர் தவிர அனைவருக்கும் சிறிய வார்த்தைகளில் நன்றி பகிர்ந்தனர். பொதுவாகவே இசைக்கலைஞர்கள் குறைவாகப் பேசுகிறார்களோ என நினைத்துக்கொண்டேன். சரி, எளிய மானுடர்களுடன் இவர்களுக்கென்ன பேச்சு.

தாமரைக்கண்ணன் பதிவு


தூரன் விழா, உளப்பதிவுகள்

தூரன் விழா விருது உரைகள்

 

முந்தைய கட்டுரைகுகை ஓவியங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைசிதம்பர பாரதி