தூரன் விழா விருது உரைகள்

விருது விழா பிரமாதமாக நடந்தது , நான் விழா வரும் முன்பு தூரன் எழுதிய கீர்த்தனை பாடல்கள் கொண்ட நீங்கள் தளத்தில் அளித்த இசை link களில் போய் கேட்டேன் , எனக்கு அவர் கீர்த்தனைகள் எழுதியவர் என்று அப்போதுதான் தெரியும் ,நான் களைகளஞ்சியம் உருவாக்கியவர் என்று மட்டுமே நினைத்து இருந்தேன் , கவுண்டரான இவரின் கீர்த்தனைகளை பிராமணர்கள் பாடி ( அந்த இசை link ல்) பாடி கொண்டிருந்தது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது . மேலும் விழாவில் நாதசுவர தவில் இசையை கவனமுடன் கேட்டேன் , தொடர்ந்து இனி கேட்க கேட்க இதன் நுட்பம் எனக்கு பிடிபடும் என்று நம்புகிறேன் .

எஸ் ஜே சிவசங்கர் விருது பெறும் சமயத்தில் மிக மகிழ்வான உணர்வுப்பெருக்குடன் இருந்தார் , மாலை அவர் பெரும் போதும் , விருது பொருளை பெறும் போதும் அவர் முகத்தினை பார்த்து கொண்டே இருந்தேன் , இந்த மகிழ்ச்சியை ஒருவருக்கு அளிக்க முடியுமென்றால் ஆயிரம் விருது விழாக்களை கூட நடத்தலாம் sir.

எனக்கு இயல்பு நேரம் செல்ல செல்ல தான் இயல்பாகி உங்களிடம் பேச ஆரம்பித்தேன் , முதல் ஒன்று இரண்டு நாட்கள் உங்களை அணுகவே திணருவேன், அந்த இயல்பு மனநிலை வந்த பிறகு தயக்கங்கள் எல்லாம் மறைந்து விடும் , ஆனால் இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும் இந்த இயல்பு மட்டும் மாற மாட்டேன் என்கிறது !

முடிந்த மட்டும் நம்பஎல்லா விழாக்களிலும் ,நிகழ்வுகளிலும் பங்கேற்க விரும்புகிறேன், ஒரே விசயம் கற்க வேண்டும் ,முடிந்த மட்டும் அறிதலை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதால் . இது போன்ற கூடல்கள் வழியாக நிறைய அறிந்து கொள்ள ,என்னை சரி செய்து கொள்ள முடியும் என்பதால் இனி எந்த நிகழ்வையும் தவற விட கூடாது என்று இருக்கிறேன் .

எனக்கு வெண்முரசு வாசிக்கும் போது ,சில சமயம் நிறுத்தி இடைவெளி விட்டு வாசிக்கும் போது பெயர்கள் , தொடர்ச்சிகள் மறந்து விடுகின்றன , இது உண்மையில் கடும் சோர்வை அளிக்கிறது , அதனால் இனி இதில் வரும் முக்கிய நூல்கள் பெயர்கள் , ஆசிரியர் பெயர்கள் ,இடங்கள் பெயர்கள் , குருமரபு எல்லா வற்றையும் விரிவான குறிப்புகள் நோட்டில் எடுத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் ,அப்படி இன்று காலை ஒரு குறிப்பை எழுதினேன் , வென்முரசில் அரை பக்கம் வந்ததை குறிப்பு எடுத்தால் அது ஒரு பக்கம் அளவிற்கு வருகிறது :)

ராதாகிருஷ்ணன்

தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா உரைகள்

அன்புள்ள ஜெ

தூரன் விருதுவிழா உரை சிறப்பாக இருந்தது. கருப்பங்கிளர் ராமசாமிப்புலவர் பற்றிய குறிப்பும் அதையொட்டி சொல்லப்பட்ட சினிமாக்கதையும் மனதை நெகிழச்செய்தன. அது என்ன படம் என அறிய விரும்புகிறேன்

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்

அந்த படம் 2018 திருவனந்தபுரம் படவிழாவில் திரையிடப்பட்டது. பட்டியலில் தேடிப்பார்க்கவேண்டும்

ஜெ

 

முந்தைய கட்டுரைசிவ தாண்டவ மூர்த்தங்கள்
அடுத்த கட்டுரைதூரன் விழா, உளப்பதிவுகள்