தமிழ் விக்கி -தூரன் விருதுவிழா இன்று மாலை

தமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6

தமிழ் விக்கி – தூரன் விருதுவிழா நேற்று (5 ஆகஸ்ட் 2023) மாலை 5 மணிக்கு தொடங்கியது. (ராஜ்மகால் திருமண மண்டபம், சென்னிமலை சாலை, கவுண்டச்சிப்பாளையம் )எஸ்.ஜே.சிவசங்கர், கொங்கு சதாசிவம் ஆகியோரின் அமர்வுகள் நிகழ்ந்தன. மு.இளங்கோவன் குடந்தை சுந்தரேசனார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் பற்றி தயாரித்த இரண்டு ஆவணப்படங்களின் சிறு பகுதிகள் திரையிடப்பட்டன.

நேற்று மாலையே நூற்றைம்பது பேர் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ராஜ் மகால் திருமணமண்டபத்திலும் ஈரோட்டில் வெவ்வேறு விடுதிகளிலுமாகத் தங்கியுள்ளனர். மாலை நிகழ்வில் பங்குகொண்டபின் இரவு 11 மணி வரை உரையாடல்களும் வேடிக்கைகளும் நிகழ்ந்தன. இன்று காலையிலேயே மீண்டும் ‘ஜமா’ சேர ஆரம்பித்துவிடும் .

தூரன் விருது- இசை நிகழ்வு

இன்று காலை முதல் சந்திப்புகள் மீண்டும் தொடங்குகின்றன.  காலை பத்துமணிக்கு பி.கே.ராஜசேகரன் வாசகர்களுடன் உரையாடுகிறார். 1130 முதல் 1230 வரை மு இளங்கோவன் வாசகர்களை சந்திக்கிறார். 1230 முதல் 130 வரை உணவு இடைவேளை. 130 முதல் 230 வரை தியடோர் பாஸ்கரன் வாசகர்களை சந்திக்கிறார். 3 மணிமுதல் 5 மணிவரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி. தூரனின் இசைப்பாடல்கள் வாசிக்கப்படும்.

மாலை 6 மணிக்கு விருதுவிழா தொடங்கும். அனைவரையும் அழைக்கிறோம்

முந்தைய கட்டுரைசமகால வாசிப்பு என்பது…
அடுத்த கட்டுரைகுருதியின் முடிவில் – ரம்யா