திருவருட்செல்வி – விஷால் ராஜா (சிறுகதைகள்)
விஷால் ராஜா எழுதிய திருவருட்செல்வி தொகுப்பை படித்தேன். அதில் இரண்டு கதைகளை முன்னரே படித்திருக்கிறேன். விஷால்ராஜாவின் எழுத்தின் முக்கியமான பண்பாக நான் எண்ணுவது அவருடைய நேர்மைதான். மிக மிக உண்மையான வாழ்க்கைப்பதிவுகளாக அவை உள்ளன. வாழ்க்கைநிகழ்வுகளை மிகைப்படுத்தாமல் அவற்றில் உள்ள வாழ்க்கையின் சாராம்சம் என்ன என்று பார்க்கும் கதைகள். அவற்றில் முக்கியமான கதை திருவருட்செல்விதான். ஒரு சாதாரண வாழ்க்கையின் எல்லா வகையான ஏமாற்றங்களும் சுரண்டல்களும் கொண்ட சூழலில் ஒரு எளிய பெண்ணின் ஆழத்தில் இருந்து ஊறும் அருள் அந்தக்கதையில் மிக இயல்பாக வெளிப்பட்டுள்ளது. மிக அரிய கதை அது.
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ,
விஷால்ராஜாவின் திருவருட்செல்வி கதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். திருவருட்செல்வி கதை சிறப்பாக இருந்தது. நீர்வழி கதையும் நல்ல படைப்பு. அவருடைய கதைகளைப் பற்றி சுஷீல்குமாரின் உரை சிறப்பாக அமைந்திருந்தது.
ராம்குமார்
திருவருட்செல்வி முன்னுரை