இலங்கை யோக முகாம்

அன்புள்ள ஜெ.சார்

கடந்த ஏழு மாதமாக மிகுந்த உற்சாகத்துடனும், உயிர்ப்புடனும் நடந்து வரும் வெள்ளி மலை யோக முகாம்  மூலம் பயனடந்த நண்பர்கள்  சிலரால்இலங்கை யோக முகாம்முன்னெடுக்கப்படுகிறது

இலங்கையில் ஏற்கனவே பல யோக மையங்கள் இயங்கி வருகின்றன எனினும் மரபார்ந்த யோக முகாமை முதல் முறையாக நடத்த திட்டமிட்டுள்ளனர்இந்த முகாமில்முழுமையான யோகம்எனும் தலைப்பில், ஆசனம் , மூச்சுப்பயிற்சி , பிரத்யாஹாரம் , அடிப்படை தியானம் என,  18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான எளிய பயிற்சிகள் அறிமுகம் செய்யப்படும்.மற்றும்யோக சிகிழ்ச்சைமுறைகளும் சிலவற்றை அறிமுகம் செய்து சில வகுப்புகளை நடத்த திட்டம்.

1950ல் எங்கள் மரபின் முதன்மை குருநாதரான சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு முழுமையான யோக கல்வியை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதே அளவு தீவிரத்துடன் அவரின் நீட்சியாகவே அங்கே செல்கிறேன்.உங்கள் வாழ்த்துக்களை கோருகிறேன்.

பெண்களுக்கான பிரத்யேக பயிற்சிகளை செய்து காண்பித்து விளக்க சாரதாவும் உடன் வருகிறார். ஆகவே பெண்களும் கலந்து கொள்ளலாம்.அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல்  28ம் தேதி வரை  இலங்கையின் வெவ்வேறு இடங்களில் இந்த முகாம் நடக்கவிருக்கிறது. இடமும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.நமது நண்பர்கள் அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முன்பதிவு அவசியம் 

இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்     [email protected]

வாட்ஸாப் தொடர்புக்கு +91- 9952965505

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்
அடுத்த கட்டுரைஅம்பைக்கு விருது