தூரன் விருது- இசை நிகழ்வு
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நாதஸ்வர இசையில் தூரனின் பாடல்களைக் கேட்டேன். தாயே திரிபுரசுந்தரி, முருகா முருகா என்றால் ஆகிய பாடல்களை என் அப்பாவுடன் சேர்ந்து எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். அவை தூரன் எழுதியவை என்று இப்போதுதான் அறிந்தேன். விழாவுக்கு வரமுடியாமல் அன்னிய நாட்டில் இருப்பது மனதைனேக்கம் கொள்ளச் செய்கிறது. வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
அன்புள்ள ஜெ
தூரனை ஒரு கலைக்களஞ்சிய ஆசிரியர் என்றுதான் தமிழ் விக்கி வழியாக முன்னிறுத்துகிறீர்கள் என நினைத்தேன். இந்த இசைக்கச்சேரி வழியாக அவரை ஒரு தமிழிசை முன்னோடியாக இளைஞர் நடுவே முன்வைக்கிறீர்கள். முருகா முருகா என்றால், எங்கு நான் செல்வேனய்யா இரண்டும் அவருடைய மாஸ்டர்பீஸ் கீர்த்தனைகள். மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்
நடராஜன் மகாலிங்கம்
நாதஸ்வர தவில் இசை :
சிறப்பு நாதஸ்வரம் :
திருமெய்ஞானம் டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளை குமாரர்,
“பெருவங்கிய கலையரசு”
திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன்
பாண்டமங்களம் ஜி.யுவராஜ்
கட்டிமேடு பி.பாலசங்கர்

அ): முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம் கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.
ஆ) : கீர்த்தனைகள் பட்டியல், ராகம், அந்த பாடலுக்கு யூடியூப் லிங்க் மூன்றையும் கீழே தொகுத்து அளித்துள்ளோம்
இ): ராக ஆலாபனை ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும்
கீர்த்தனைகள் இணைப்பு
1) : கீர்த்தனை : கணநாதனே குணபோதனே.ராகம் : சாரங்க (https://www.youtube.
2) : கீர்த்தனை : தாயே திரி்புர சுந்தரி.ராகம் : சுத்தசாவேரி (https://www.
3) : கீர்த்தனை : அன்பே சிவம், அருளே தெய்வம். ராகம் : நளினகாந்தி (https://www.
4) : கீர்த்தனை : முருகா முருகா.ராகம் :சாவேரி (https://www.youtube.
5) : கீர்த்தனை : ஹரிஹர சுதனே ஐயப்பா.ராகம் : ஆபோகி (https://www.youtube.
6): கீர்த்தனை : எங்கே தேடுகின்றாய். ராகம் : ஹரிகாம்போதி
7) : கீர்த்தனை : எங்கு நான் செல்வேனய்யா.ராகம் : திவ்ஜாவந்தி (https://www.youtube.com/
8) : முதன்மை ராக ஆலாபனை : ராகம் ஆபேரி
9) : கீர்த்தனை : முரளிதர கோபாலா. ராகம் : மாண்ட் (https://www.youtube.
10): கீர்த்தனை : கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் : ராகம் : பிருந்தாவன சாரங்க (https://www.youtube.
11) : காவடி சிந்து: அழகு தெய்வமாக வந்து. (https://www.youtube.
12) :மங்களம்(முடிவு) : சத்தியமே வெல்லும்,தர்மமே ஓங்கிடும். (https://www.youtube.com/