இன்றைய அமர்வுகள்

தமிழ் விக்கி -தூரன் விருது விழா இன்று 5 ஜூலை 2023 அன்று ஈரோடு கவுண்டச்சிப்பாளையம் ராஜ்மகால் அரங்கில் மாலையில் இருந்து தொடங்குகிறது. மாலை நிகழ்வில் இரண்டு அமர்வுகள்

கொங்கு சதாசிவம்

கொங்கு சதாசிவம் கொங்கு வரலாற்றை தொல்லியல் தடையங்கள் வழியாக எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர். தொழில்முறையில் தச்சர். தன் தனியார்வத்தால் கொங்குநாட்டின் தொல்காலக் குகைகள், தொல்லியலிடங்களுக்கு பயணம் செய்து தரவுகளை திரட்டி வெளியிடுகிறார். தொல்லியல் துறைக்கு மலைப்பகுதிகளின் தொல்லியல் தடையங்களை விரிவாக தெரிவித்து ஆவணப்படுத்தி வருகிறார்.

எஸ்.ஜே.சிவசங்கர் தமிழ்விக்கி- தூரன் சிறப்பு விருது பெறுகிறார். குமரிமாவட்டத்தின் நாட்டார் பண்பாட்டை ஆவணப்படுத்தும் ஆய்வுகளில் இருக்கிறார். புனைவெழுத்தாளர். ஆவணப்பட இயக்குநர். அம்பேத்கர் நூல்களின் மொழியாக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்

எஸ்.ஜே.சிவசங்கர்

முந்தைய கட்டுரைதனித்த நகரங்கள்: பின்நவீனத்துவ எழுத்தாளர்கள்-    பி.கே.ராஜசேகரன்
அடுத்த கட்டுரைவே. ரா.தெய்வசிகாமணி கவுண்டர்