குருகு ஆறாவது இதழ் ‘தமிழ்- விக்கி தூரன் விருது’ சிறப்பிதழாக வெளிவருகிறது. தமிழ் ஆய்வுப்புலத்தில் சிறப்பாக பங்களித்தவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தன் பெருமுயற்சியால் தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவந்த பெரியசாமித்தூரன் பெயரால் இவ்விருது சென்ற 2022ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்வருடம் விருது பெறும் மு.இளங்கோவன் மற்றும் எஸ்.ஜே.சிவசங்கர் படைப்புகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. எஸ்.ஜே.சிவசங்கரின் நேர்காணலும் சொல்லாய்வு பற்றிய அவரது கட்டுரையும் வெளிவருகிறது. மு.இளங்கோவன் மலேசிய தமிழர் வழக்காறு பற்றிய கட்டுரையை தந்துள்ளார். இன்று “பாரதியியல்” என்ற ஒரு ஆய்வுத்துறையாக மாறியுள்ள பாரதியின் படைப்புகள் பற்றிய ஆய்விற்கும் முன்னோடியான பெரியசாமி தூரனின் ‘துளித்துளிக் கால்கள்’ கட்டுரை பிரசுரமாகிறது. 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்-விக்கி தூரன் விருது பெற்ற ஆய்வாளர் கரசூர் பத்ம பாரதியின் நரிக்குறவர் ஆய்வு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மு.இளங்கோவன் இயக்கிய ஆவணப்படம் குறித்த கட்டுரையை தாமரைக்கண்ணன், புதுச்சேரி எழுதியுள்ளார். சிவசங்கர் எழுதி வெளிவர இருக்கும் ‘நீலகேசி’ நூல் குறித்து ரம்யா கட்டுரை எழுதியுள்ளார்.
அன்புடன்
குருகு