லக்ஷ்மி சரவணக்குமார் இணையதளம்

லக்ஷ்மி சரவணக்குமாரின் இணையதளம் அவருடைய பிறந்தநாளை ஒட்டி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் ஓர் ஆசிரியருக்கு மட்டுமான இத்தகைய இணையதளங்கள் மிக முக்கியமானவை. அந்த ஆசிரியருடனான ஒரு தொடர் உரையாடலை அவை உருவாக்குகின்றன. முகநூல் போன்ற தளங்களில் அத்தகைய உரையாடல் நிகழ முடியாது. அங்கே ஒருவகையான மேலோட்டமான உற்சாகமான அளவளாவலுக்கு இடமிருக்கலாம். இணையதளம் நீண்டகால அளவில் நீடிக்கும் உரையாடலுக்கான இடம். ஓர் எழுத்தாளரின் எழுத்துக்களை முழுமையாக அறிவதற்கான ஓர் ஊடகம் அது.

லக்ஷ்மி சரவணக்குமாரி இணையதளம் அழகிய வடிவமைப்புடன், முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பக்கவடிவமைப்பாளருக்கு முதல் பாராட்டு. பதிவுகள், காணொளிகள், பாட்காஸ்ட் என ஒரு சிறந்த இணைய இதழின் ஒருமையுடன் உள்ளது. வாழ்த்துக்கள்

லக்ஷ்மி சரவணக்குமார் இணையதளம் 

முந்தைய கட்டுரைமு. சாயபு மரைக்காயர்
அடுத்த கட்டுரைபழையநிலங்களில் முளைத்தெழல்