வெள்ளைவாரணனார் மூன்று களங்களில் பங்களிப்பாற்றியவர். தொல்காப்பிய ஆய்வுகளில் அவருடைய உரைகள் முக்கியமான வழிகாட்டிகளாக கருதப்படுகின்றன. சைவசிந்த்தாந்த நூல்களுக்கு அவர் எழுதிய உரைகளும், அவர் எழுதிய திருமுறைகளின் வரலாறுகளும் சமய ஆய்வில் மதிக்கப்படும் பங்களிப்புகள். இசைத்தமிழாய்வில் விபுலானந்தருடன் இணைந்து பங்காற்றியவர்.