உலகமே கேள்!

1962 ல் வைக்கம் முகம்மது பஷீர் எர்ணாகுளம் டி.பி.சாலையில் தொடங்கிய பஷீர்ஸ் புக் ஸ்டால் என்னும் கடைக்காக அவர் மாத்ருபூமி நாளிதழில் அளித்த சிறிய விளம்பரம்.

உலகமே கவனி !

ஹிந்துமகாசபையினர், முஸ்லீம் லீகினர், சோஷலிஸ்டுகள், காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள்-  அதாவது எந்த மடையனுக்கும் உகந்த எல்லா புத்தகங்களும் கிடைக்கும் துனியாவிலுள்ள ஒரே புத்தகக் கடை என்ன தெரியுமா?

பஷீர்ஸ் புக் ஸ்டால்

டி.பி.ரோடு. எர்ணாகுளம்


மேற்படி அரசியல் கட்சிகள் எல்லாமே குடுமிப்பிடிச் சண்டை, நடுத்தெருக் கொலைகள் என அரசியலாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த விளம்பரம் வெளிவந்திருக்கிறது. பஷீர் விதூஷகனுக்கே உரிய அளவிலா சுதந்திரத்தை எடுத்துக்கொண்ட கதைசொல்லி

வைக்கம் முகமது பஷீர்- தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைதீபு ஹரி
அடுத்த கட்டுரைஒரு காலகட்டத்தின் புயல்- ரம்யா