கோவை கொடீஷியா விருதுகள்

கோவை கொடீஷியா இலக்கிய விருதுகள் நாளை (21 ஜூலை 2023)  தொடங்கும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது கவிஞர் சுகுமாரன் பெறுகிறார் ( சுகுமாரன். தமிழ் விக்கி)

தமிழ்க்கவிதையில் இளமையின் சீற்றத்துடன் நுழைந்து ஒரு திசைமாற்றத்தை உருவாக்கியவர். அரியமொழிவெளிப்பாடுகளுக்காக மதிக்கப்படும் முதன்மைக் கவிஞர்

அருட்செல்வப்பேரரசன்

மொழியாக்கத்துக்கான விருது பெறுபவர் அருட்செல்வப் பேரரசன் ( அருட்செல்வப் பேரரசன் – தமிழ் விக்கி). மகாபாரத மொழியாக்கம் வழியாக கவனிக்கப்பட்டவர். வான்மீகி ராமாயணம், ஹரிவம்ச புராணம் ஆகியவற்றையும் மொழியாக்கம் செய்துள்ளார்.

சிறுகதைக்கான விருது மயிலன் சின்னப்பனுக்கு வழங்கப்படுகிறது. தஞ்சைப்பகுதியில் இருந்து உருவாகி வந்த முதன்மைச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர் மயிலன். (மயிலன் சின்னப்பன் தமிழ் விக்கி)

விருது பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைநமக்கிங்கே தொழில் காதல் செய்தல்- பெருந்தேவி
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விழா