தமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6

தமிழ்விக்கி – தூரன் விருது 2023

தமிழ் விக்கி தூரன் விருதுகள் வரும் ஆகஸ்ட் 5-6 தேதிகளில் ஈரோட்டில் நிகழும் விழாவில் அளிக்கப்படுகின்றன.  சென்ற ஆண்டுபோலவே இவ்வாண்டும் ஆகஸ்ட் 5, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நிகழ்வுகள் தொடங்கும்.

சனிக்கிழமை ஆகஸ்ட் 5 அன்று மாலை மூன்று அமர்வுகள்.  பங்கேற்பவர்களுக்கு சனி இரவு ராஜ் மகால் கல்யாண மண்டபத்தில் தங்குமிடம் உணவு ஏற்பாடாகியுள்ளது.

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

எஸ்.ஜே.சிவசங்கர்- தமிழ் விக்கி 

மறுநாள், ஆகஸ்ட் 6, ஞாயிறு காலை முதல் சந்திப்புகள் நிகழும். விருந்தினர் மற்றும் ஆய்வாளர்களுடனான உரையாடல்கள்.

ஆகஸ்ட் 6 மாலை 6 மணிக்கு விருதுவிழா. விழாவில் விருது அளிக்கும் சிறப்பு விருந்தினர்களாக சு.தியடோர் பாஸ்கரன், மலையாள விமர்சகர், ஆய்வாளர் பி.கே.ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

சு.தியடோர் பாஸ்கரன் தமிழ் விக்கி

பி.கே.ராஜ சேகரன் தமிழ் விக்கி

விழாவை ஒட்டி தியடோர் பாஸ்கரன், பி.கே.ராஜசேகரன் மு.இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர் ஆகியோருடன் வாசகர் உரையாடுவதற்கான அரங்குகளும் அமைக்கப்படும்.

அனைவரும் வருக

முந்தைய கட்டுரைவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
அடுத்த கட்டுரைதேன்வரந்தை- தென்னக பிம்பேத்கா