மு. இளங்கோவன் பேட்டி வல்லினம் இதழில் மிக அழகாக இருந்தது. அவருடைய வாழ்க்கைப்பயணத்த்தை மட்டுமல்ல தமிழிலக்கிய– பண்பாட்டு ஆய்வுகளின் இன்றைய நிலைமையையும் உணர முடிந்தது. சிறப்பான பேட்டியை எடுத்த வல்லினம் குழுவுக்கு பாராட்டுகள்
ஆனந்த்ராஜ்
*
அன்புள்ள ஜெ
மு.இளங்கோவனின் பேட்டி கண்டேன். அதில் அவருடைய தளராத ஊக்கமும் அடிப்படையில் அறிவுச்செயல்பாடுகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் வெளிப்படுகிறது. மிகச்சிறந்த உரையாடல்
சரவணன் எம்.ஆர்.
வல்லினம்: மு. இளங்கோவன் பேட்டி
தமிழ் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரும், தமிழிசை ஆய்வாளரும் , பாரதியியல் ஆய்வாளரும், குழந்தைக் கவிஞருமான பெரியசாமித் தூரன் கொங்குநாட்டின் முதன்மை அறிவாளுமை. தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவரான அவரை நினைவுகூரும்பொருட்டு 2022 முதல் தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது ஆகஸ்ட் 5-6 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.
இவ்வாண்டுக்கான விருது ஆய்வாளர் மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருது இளம் ஆய்வாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது.
விருதுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி (ஞாயிறு) ஈரோட்டில் வழங்கப்படுகின்றன. 5 ,சனிக்கிழமை மாலை முதல் விழா தொடங்கும். ஆகஸ்ட் 5 ஞாயிறு மாலை முதக் இலக்கியச் சந்திப்புகள், உரையாடல்கள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. பங்கேற்பாளர்களுக்கு தங்குமிடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 6 காலை 9 முதல் மீண்டும் உரையாடல்கள் நிகழும். ஆகஸ்ட் 6 ஞாயிறு மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடையும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.