சென்னையில் ஒரு கூட்டம்

அன்புள்ள ஆசிரியருக்கு

 

வணக்கம்

எழுத்தாளர் யுவன் சந்திர சேகரின் கதை ஒன்றில் பட்டாளத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் கைம்பெண் தாய் தான் பிறந்த வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு சமையல் உதவி செய்கையில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கண்ணாடி கீழே விழுந்து உடைந்து விடும் அதன் உடைந்த சில்லுகளை சுத்தம் செய்ய சாணி எடுக்க அவளின் அம்மா செல்லுவார் அம்மாவுக்கு பதிலாக செல்லவேண்டிய அப் பெண் உத்தரத்தைப் பார்த்து நிலைகுத்தின விழிகளிலிருந்து கண்ணீர் மல்க “போயிட்டாண்டா,என் ஒத்தெப் பிள்ள போயிட்டாண்டா,என்னைய ஒத்தெ மரமா நிக்கவிட்டுட்டுப் போயிட்டாண்டா” என கூக்குரலிட்டு அழுவாள்

மொத்த குடும்பமும் பல ஆண்டுகளாக தனிமையில் இருந்த அவளுக்கு  பைத்தியம் பிடித்து விட்டதாக எண்ணுவார்கள் ஆனால் சொல்லி வைத்த மாதிரி ரெண்டு நாட்களில் பட்டாளத்திலிருந்த  இளைஞன் போரில் பீரங்கி வெடியில் அகப்பட்டுச் சிதறி மரணித்து விட்டதாக தந்தி வரும். வெயிலிருந்து இருளுக்குள் வந்ததும் கண் மங்கி விழிப்பது போல நமக்கு மீண்டும் அந்த அழுகுரல் கேட்கும் அதை போன்று மனித மனங்களுக்கு  ஏதோ பித்து பிடித்துவிட்டது என்று  எண்ணி அதன்பின் வெயில் பார்த்த கண்போல் மங்கி விளங்கும் பல தருணங்களை தரும் படைப்பான எழுத்தாளர்.

அகரமுதல்வன் விகடனில் தொடராக எழுதி கடந்த தை முதல் நாளில் நூலாக வெளிவந்த “கடவுள் பிசாசு நிலம்” நூலுக்கான  அறிமுக விழாவை எழுத்தாளர்.யுவன் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் சூலை முதல் திகதியில் சென்னையில் நடக்கவிருப்பதை உங்களுக்கும் உங்கள் வாயிலாக வாசக நண்பர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.

அன்பு ஹனீஃபா

 

நிகழ்விடம் கவிக்கோ அரங்கம் சென்னை

நாள் ஜூலை 1, 2023

பொழுது மாலை ஆறுமணி

முந்தைய கட்டுரைஇந்து மூலநூல்கள் மட்டுமே சாதியை முன்வைக்கின்றனவா?
அடுத்த கட்டுரைவெண்முரசு நாட்கள்