தூரன் விருது 2023, கடிதங்கள்

தமிழ் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரும், தமிழிசை ஆய்வாளரும் , பாரதியியல் ஆய்வாளரும், குழந்தைக் கவிஞருமான பெரியசாமித் தூரன் கொங்குநாட்டின் முதன்மை அறிவாளுமை.  தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவரான அவரை நினைவுகூரும்பொருட்டு 2022 முதல் தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது ஆகஸ்ட் 5-6 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.

இவ்வாண்டுக்கான விருது  ஆய்வாளர் மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருது இளம் ஆய்வாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது.

விருதுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி ஈரோட்டில் வழங்கப்படுகின்றன. 5 மாலை முதல் விழா தொடங்கும். ஆகஸ்ட் 5 மாலை இலக்கியச் சந்திப்புகள், உரையாடல்கள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. தங்குமிடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6 காலை 9 முதல் உரையாடல்கள் நிகழும். ஆகஸ்ட் 6 மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடையும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருதை பெறும் பேராசிரியர். மு. இளங்கோவன் அவர்களுக்கும் மற்றும் தமிழ் விக்கி தூரன் சிறப்பு விருதை பெறும் ஆய்வாளர் சிவசங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்ற ஆண்டு, தமிழ் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களை பற்றி அறிந்து கொள்ள கூகுளை ஆய்ந்து கொண்டிருந்தேன். கூகுள் என்னை நேராக ஆசிரியர் மு. இளங்கோவனின் வலைப்பக்கத்திற்கு கொண்டு சென்றது. அங்கு தமிழறிஞர்கள் மற்றும் தமிழிசை அறிஞர்கள் பற்றி அவர் சேகரித்து பதிவுசெய்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்துமே ஆர்வம் கொண்ட யாரையும் ஆச்சரியப்பட வைப்பவை. சிறுக சிறுக தனி ஒருவராக பெரிய தகவல் களஞ்சியத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். மேலாக2014 –ல் ப. சுந்தரேசனாரின் நூற்றாண்டு விழாவை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். தமிழிசை அறிஞர் ஒருவரின் நூற்றாண்டு விழா நடத்துவதற்காக அவர் பட்ட பாடுகள் என்னவெல்லாம் என்பதை அவர் தளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம், அவர் அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

இவ்வளவு சீரிய செயல்பாட்டாளருடன் ஆசான் ஜெயமோகனுக்கு என்ன மாதிரி உறவு உள்ளது என்று அறிய ஆவல் மோலோங்க, அவர் தளத்தில் உங்கள் பெயரை இட்டு தேடி பார்த்தேன்2009 –ல் தங்களை வீட்டில் வந்து பார்த்து அவர் பேசியதை பற்றிய பதிவை அவர் தளத்திலும், அச்சந்திப்பை பற்றிய பதிவை உங்கள் தளத்திலும் கண்டேன். ஆகா என்று மனம் நிரம்பியது. தன்னுடைய பதிவில் பேராசிரியர் இளங்கோவன்மாற்றுக் கருத்துடையவர்கள் என்றாலும் அவர்களின் உழைப்பை எண்ணி எண்ணி மதிப்பவன்என்று எழுதி இருப்பார். அதையே தான் சமீபத்தில் நண்பர் ஒருவரின் கடிதத்திற்கான பதிலில்நீங்களே கூட செய்து காட்டலாம், மாற்று கருத்து என்னவாக இருந்தாலும், யாராலும் தவிர்க்கவே முடியாதபடி உங்கள் செயல் அமைந்தால், உங்களையும் தேடி வருவோம், விருதுடன்!” என்று அதையேவேறு வடிவில்எழுதி இருப்பீர்கள். ஆழத்தில் அனைத்தும் ஒன்றுதான் மேலே தென்படுகின்ற அலைகளில் தான் அத்தனை இரைச்சல்களும் சலம்பல்களும்.


சதீஸ்குமார்
தென்கொரியா

அன்புள்ள ஜெ

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கிதூரன் விருதுகள் மு.இளங்கோவனுக்கும் எஸ்.ஜே.சிவசங்கருக்கும் வழங் கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அடிப்படை ஆய்வுகள் செய்பவர்கள் இவர்கள். இதுதான் உண்மையில் ஆய்வு. இங்கே ஆய்வு என்ற பேரில் செய்யப்படுபவை மேலைநாட்டுக் கொள்கைகளை இங்குள்ள சில புத்தக மேற்கோள்களுடன் எழுதுவதுதான். அவர்கள் ஆய்வாளர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இடைவிடாமல் சமகால அரசியல்சமூகவியல்சினிமாக்களை பற்றி எழுதிக்கொண்டே இருப்பார்கள். ஆகவே புகழுடனும் இருப்பார்கள். அவர்களைத்தான் ஆய்வாளர் என்று நாம் அறிந்திருப்போம். உண்மையான ஆய்வாளர்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்தவகையான விருதுகள் வழியாகவே அவர்கள் அறியப்படுவார்கள்.

நீங்கள் அளிக்கும் விருதுகள் இதுவரை அடிப்படை ஆய்வை செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. போலிஆய்வு செய்யும் ஆசாமிகளுக்கு வழங்கப்பட்டதில்லை. போலி ஆய்வாளர்களை உண்மையில் அமெரிக்காஐரோப்பாவின்கொள்கை முகவர்கள்என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கு எதிராக நம்முடைய உண்மையான ஆய்வாளர்களை முன்வைக்கவேண்டியதை செய்யவேண்டியவர்கள் பல்கலைக்கழகங்கள். அந்தப்பணியை நீங்கள் செய்வது நிறைவளிக்கிறது

ஆர். சந்தானகிருஷ்ணன் 

முந்தைய கட்டுரைகுருகு ஜூலை இதழ்
அடுத்த கட்டுரைஜேம்ஸ் எம்லின்