பி.எஸ்.ராமையா

புதுமைப்பித்தன் பற்றிய ஆய்வுகளுக்காக அலைந்த காலத்தில் பி.எஸ்.ராமையாவைச் சந்தித்ததைப் பற்றி வேதசகாயகுமார் சொல்லியிருக்கிறார். மணிக்கொடி எழுத்தாளர்களில் வசதியாக வாழ்ந்தவர் அவர் மட்டுமே. காரணம் அவர் பல பத்தாண்டுகள் சினிமாவில் வசனகர்த்தவாக வெற்றிகரமாக திகழ்ந்தார். இயக்குநர் தயாரிப்பாளர் என்னும் பங்குகளையும் ஆற்றினார். அவருடைய மருமகள் அவருக்கு மிக உதவியாக இருந்ததை குமார் வியப்புடன் சொல்வதுண்டு. மணிக்கொடி இதழ்களை அவரிடமிருந்துதான் வேதசகாயகுமார் பெற்றார் தான் சந்தித்தவர்களிலேயே மிகச்சிறந்த உரையாடல்காரர் ராமையா என்று வேதசகாயகுமார் மதிப்பிட்டார். மணிக்கொடி காலகட்ட நகைச்சுவைகளை வெடிச்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே இருந்தாராம்

பி.எஸ்.ராமையா

பி.எஸ்.ராமையா
பி.எஸ்.ராமையா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவகுப்புகள் வழியாகக் கற்றல்
அடுத்த கட்டுரைபெண்,அறம்,பொறுப்பு