என்.ஸ்ரீராம் கதைகளை வாசித்தபிறகு அவரை, நாட்டுப்புறப் பாடகன் என்பதைப் போல நாட்டுப்புறக் கதை சொல்லி என்றுதான் அடையாளப்படுத்த முடிகிறது. அவர் சொற்களில் வர்ணனைகளில் வெளிப்படுவது கச்சிதமான வாக்கிய அமைப்பு என்றாலும் அது ஒரு கிராமத்தானின் வட்டாரப் பேச்சுமொழியாகவே இருக்கிறது. அவர்கள் பாடும் ஏலோலோவாக அந்த நடை இருக்கிறது. சித்தார்த்தி வருஷ வெய்யிலும் ஆவணி்மாத மழையும் என வருகின்றன நாள்குறிப்புகள்