தமிழில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்து கூறப்படாத வாழ்க்கைக்களங்களை இலக்கியத்திற்குள் கொண்டுவந்த படைப்பாளிகளின் வரிசையில் எண்பதுகளுக்குப்பின் உருவானவர்களில் பாவண்ணன் முக்கியமானவர். பாண்டிச்சேரி- கடலூர் பகுதியின் மொழியும் மக்களும் இவருடைய ஆக்கங்கள் வழியாக இலக்கியத்தில் இடம்பெற்றனார். மொழியாக்கங்கள் வழியாக கன்னட இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்தவர். தமிழில் தலித் இலக்கியம் உருவாக பாவண்ணனின் கன்னட தலித் இலக்கிய மொழியாக்கங்கள் பெரும்பங்கு வகித்தன.